நீ சாதிக்கப்பிறந்தவன்



மேற்கில் விழுந்து,பின்
கிழக்கில் புதிதாய் எழும்
சூரியனும்

தேய்ந்து,பின்
வளர்ந்து பிரகாசமாய் ஒளிரும்
நிலாவும்

பூமியாய்
பிளந்தெழும் புல்லும்

இவை என்னை நோக்கி
மெளனமாய் சொல்லும்
இளைஞனே...
எழுந்திரு
நீ சாதிக்கப்பிறந்தவன் என்று



கவிதை ; சரோ
 
posted by தமிழ் at 11:34 PM, |

குறிக்கோள் அற்ற வாழ்க்கை





குறிக்கோள் அற்ற வாழ்க்கை,
முட்கள் அற்ற கடிகாரம் போன்றது.
அது நின்றாலும்,
ஓடினாலும் பயனில்லை.


நன்றி ; முத்தமிழ் மன்றம்
 
posted by தமிழ் at 6:56 PM, |

எது தன்னம்பிக்கை




முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை!
முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை!
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!


நன்றி ; முத்தமிழ் மன்றம்
 
posted by தமிழ் at 1:22 AM, |

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே



நல்ல விசியங்களைக் கேட்டதும் ,
வாசிப்பது கூட நன்று தான்.









ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

 
posted by சக்தி at 4:47 PM, |

ம(லை)ப்பு




சந்திக்க அஞ்சும்வரை
பிரச்சனைகள் எல்லாம்
பிரமிப்புகள்!
சந்திக்க துணிந்தபின்
அவை எல்லாம்
பிம்பங்கள்!!



கவிதை ; நிலா சேகர்
 
posted by தமிழ் at 4:02 AM, |

எது வெட்கம் ?



வீழ்வது
வெட்கமல்ல
வீழ்ந்துகிடப்பதுதான்
வெட்கம்.
 
posted by தமிழ் at 3:43 AM, |

உங்களை நீங்களே நம்புங்கள்




  • உங்களை நீங்களே இகழாதீர்கள்
    அது கடவுளுக்கு எதிரான கண்டனத் தீர்மானம்!


  • உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்
    அது கடவுளுக்குப் படிக்கிற பாராட்டுப் பத்திரம்!


  • உங்களைப் பிறரோடு ஒப்பிடாதீர்கள்
    அது உங்கள் தனித்தன்மைக்கு நீங்கள் செய்யும் அவமானம்!


  • உங்கள் பலங்கள் மீது கவனம் செலுத்துங்கள்
    அது உங்கள் பலவீனங்களை வெளியேற்றும் ரகசியம்


  • உங்களுக்குப் பிடித்ததை விருப்பத்துடன் செய்யுங்கள்
    அது உங்கள் விசுவரூபதை வெளிப்படுத்தும் சாகசம்


  • உங்கள் மீதான விமர்சனங்களைப் பரிசீலியுங்கள்
    அது உங்கள் வளர்ச்சிக்கு மற்றவர்கள் போடும் உரம்


  • உங்களை நீங்களே எடைபோடுங்கள்
    அது உங்கள் வெற்றிக்கு நீங்கள் இடும் அச்சாரம்


  • உங்கள் குறைகளைக் களையுங்கள்
    அது அவற்றைக் கடப்பதற்கான முயற்சியின் அடித்தளம்


  • உங்களை நீங்களே நம்புங்கள்
    அது உங்கள்மேல் கடவுள்வைத்த நம்பிக்கையின் அடையாளம்



 
posted by சக்தி at 1:17 AM, |
கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket