எட்டாத உயரம் என்று ஒன்று இல்லை இன்று தொட்டில் கட்டி, தாலாட்டு பாடி தூங்கவைத்த காலம் போய் நிலவு சென்று புட்டி பாலூட்டி பாடம் நடத்தும் இந்த காலத்தில் யாரும் எது எட்டாத உயரம் எட்டாத உயரம் என்பதற்காக கிரகாம் பொல் தன் முயற்சியை தொடாமல் விட்டிருந்தால் நமக்கு இன்று எது தொலைபேசி ஆம்சுட்ராங் நினைத்திருந்தால் நிலவை எப்படி தொட்டிருக்கமுடியும் வெற்றி கொடி நாட்டிருக்கமுடியும் எட்டாத உயரம் என்பதற்காக விட்டுவிட்டா வந்துவிட்டான் இந்த மனிதன் ஆழமானது கடலாம் நீலமானது வானமாம் கடலின் ஆழத்தை கண்டறிய கதிர்களைக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன். வானத்தில் அந்தரங்கம் அனைத்தும் தெரியும் இந்த மனிதனுக்கு மண்ணில் வீடு கட்டி போரடித்த மனிதன் விண்ணில் வீடு கட்ட புறப்பட்ட இந்த நேரத்தில் யாருக்கு எது எட்டமுடியாத உயரம் சுட்டெரிக்கும் சூரியனையும் கூட தொட்டணைக்கும் துடிப்பு மிக்க இளைஞர்கள் வாழும் இச்சமுதாயத்தில் யாருக்கு எது எட்டமுடியாத உயரம்
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில், இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது, என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது! எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்! யாருக்கில்லைப் போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்! ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்! இலட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு, உன்னை வெல்ல யாரும் இல்லை உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் அவமானம் படு தோல்வி எல்லாமே உரமாகும்! தோல்வியின்றி வரலாறா! துக்கம் என்ன என் தோழா! ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ அது பனியோ நீ மோதிவிடு!