எட்டாத உயரம்





எட்டாத உயரம் என்று ஒன்று
இல்லை இன்று
தொட்டில் கட்டி, தாலாட்டு பாடி
தூங்கவைத்த காலம் போய்
நிலவு சென்று
புட்டி பாலூட்டி பாடம் நடத்தும்
இந்த காலத்தில்
யாரும் எது எட்டாத உயரம்
எட்டாத உயரம் என்பதற்காக
கிரகாம் பொல்
தன் முயற்சியை தொடாமல் விட்டிருந்தால்
நமக்கு இன்று எது தொலைபேசி
ஆம்சுட்ராங் நினைத்திருந்தால்
நிலவை எப்படி தொட்டிருக்கமுடியும்
வெற்றி கொடி நாட்டிருக்கமுடியும்
எட்டாத உயரம் என்பதற்காக
விட்டுவிட்டா வந்துவிட்டான் இந்த மனிதன்
ஆழமானது கடலாம்
நீலமானது வானமாம்
கடலின் ஆழத்தை கண்டறிய
கதிர்களைக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன்.
வானத்தில் அந்தரங்கம்
அனைத்தும் தெரியும் இந்த மனிதனுக்கு
மண்ணில் வீடு கட்டி போரடித்த மனிதன்
விண்ணில் வீடு கட்ட புறப்பட்ட இந்த நேரத்தில்
யாருக்கு எது எட்டமுடியாத உயரம்
சுட்டெரிக்கும் சூரியனையும் கூட
தொட்டணைக்கும் துடிப்பு மிக்க
இளைஞர்கள் வாழும் இச்சமுதாயத்தில்
யாருக்கு எது எட்டமுடியாத உயரம்


கவிதை; காளிமுத்து பாரத்
 
posted by தமிழ் at 7:23 PM, |
கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket