
மேற்கில் விழுந்து,பின்
கிழக்கில் புதிதாய் எழும்
சூரியனும்
தேய்ந்து,பின்
வளர்ந்து பிரகாசமாய் ஒளிரும்
நிலாவும்
பூமியாய்
பிளந்தெழும் புல்லும்
இவை என்னை நோக்கி
மெளனமாய் சொல்லும்
இளைஞனே...
எழுந்திரு
நீ சாதிக்கப்பிறந்தவன் என்று
கவிதை ; சரோ
posted by தமிழ் at 11:34 PM, |

குறிக்கோள் அற்ற வாழ்க்கை,
முட்கள் அற்ற கடிகாரம் போன்றது.
அது நின்றாலும்,
ஓடினாலும் பயனில்லை.
நன்றி ; முத்தமிழ் மன்றம்
posted by தமிழ் at 6:56 PM, |

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை!
முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை!
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
நன்றி ; முத்தமிழ் மன்றம்
posted by தமிழ் at 1:22 AM, |

நல்ல விசியங்களைக் கேட்டதும் ,
வாசிப்பது கூட நன்று தான்.
posted by சக்தி at 4:47 PM, |

சந்திக்க அஞ்சும்வரை
பிரச்சனைகள் எல்லாம்
பிரமிப்புகள்!
சந்திக்க துணிந்தபின்
அவை எல்லாம்
பிம்பங்கள்!!
கவிதை ; நிலா சேகர்
posted by தமிழ் at 4:02 AM, |

வீழ்வது
வெட்கமல்ல
வீழ்ந்துகிடப்பதுதான்
வெட்கம்.
posted by தமிழ் at 3:43 AM, |

- உங்களை நீங்களே இகழாதீர்கள்
அது கடவுளுக்கு எதிரான கண்டனத் தீர்மானம்!
- உங்கள் பலத்தை அடையாளம் காணுங்கள்
அது கடவுளுக்குப் படிக்கிற பாராட்டுப் பத்திரம்!
- உங்களைப் பிறரோடு ஒப்பிடாதீர்கள்
அது உங்கள் தனித்தன்மைக்கு நீங்கள் செய்யும் அவமானம்!
- உங்கள் பலங்கள் மீது கவனம் செலுத்துங்கள்
அது உங்கள் பலவீனங்களை வெளியேற்றும் ரகசியம்
- உங்களுக்குப் பிடித்ததை விருப்பத்துடன் செய்யுங்கள்
அது உங்கள் விசுவரூபதை வெளிப்படுத்தும் சாகசம்
- உங்கள் மீதான விமர்சனங்களைப் பரிசீலியுங்கள்
அது உங்கள் வளர்ச்சிக்கு மற்றவர்கள் போடும் உரம்
- உங்களை நீங்களே எடைபோடுங்கள்
அது உங்கள் வெற்றிக்கு நீங்கள் இடும் அச்சாரம்
- உங்கள் குறைகளைக் களையுங்கள்
அது அவற்றைக் கடப்பதற்கான முயற்சியின் அடித்தளம்
- உங்களை நீங்களே நம்புங்கள்
அது உங்கள்மேல் கடவுள்வைத்த நம்பிக்கையின் அடையாளம்
posted by சக்தி at 1:17 AM, |